அஞ்சான் படத்தோட தோல்வியை சமாளிக்க ரொம்பவே கஷ்டப்பட்டேன்! இயக்குனர் லிங்குசாமி வேதனை!

அஞ்சான் படத்தின் தோல்வியை சமாளிக்க தான் மிகவும் கஷ்டபட்டேன் என இயக்குனர் லிங்கு சாமி வருத்தத்துடன் பேசியுள்ளார். 

அஞ்சான் 

இயக்குனர் லிங்கு சாமி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அஞ்சான். இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்திருந்தார். வித்யுத் ஜம்வால், மனோஜ் பாஜ்பாய், சூரி, முரளி சர்மா, தலிப் தஹில், ஆசிப் பாஸ்ரா, ஜோ மல்லூரி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.  படத்திற்க்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் ஆகி படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அந்த சமயமே அதிகமாக்கியது என்றே கூறலாம்.

தோல்வி 

அஞ்சான் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இயக்குனர் லிங்கு சாமி அந்த சமயம் படம் குறித்து பேசி படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தினார் என்றே கூறலாம். இதன் காரணமாகவே படத்தின் மீது பெரிய அளவில்இருந்தது. ஆனால், வசூல் ரீதியாக ஒரு அளவுக்கு சுமாரான வெற்றியை பெற்றாலும் படத்திற்கு விமர்சன ரீதியாக சரியான வரவேற்பு கிடைக்கவில்லை இதனால் இந்த திரைப்படமும் தோல்வி அடைந்தது.

தோல்வி குறித்து லிங்குசாமி

இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் லிங்கு சாமி அஞ்சான் படத்தின் தோல்வியை சமாளிக்க தான் மிகவும் கஷ்ட்டப்பட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” தமிழ் சினிமாவில் ஒரு படத்திற்காக இந்த அளவிற்கு சோஷியல் மீடியாவில் விமர்சனங்கள் எழுந்தது அஞ்சான் படத்திற்கு தான்.

நான் படம் பற்றி பல விஷயங்களை கூறி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது உண்மை தான் ஆனால், நான் அப்படி பேசும்போது படத்தின் கதை வேறு மாதிரி இருந்தது. அதன் பிறகு வேறு மாதிரி மாற்றியமைக்க பட்டது. இது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம்.  படத்தின் வசூல் 3 நாட்களில் சாதனைகளை படைத்தது.

ஆனால், படம் சிலருக்கு பிடித்து போகவில்லை.  பிறகு 3 நாட்களுக்கு பின் படம் பற்றியும் என்னை பற்றியும் விமர்சனங்கள் வந்துகொண்டிருந்தது தாங்கவே முடியவில்லை. என்னை மாதிரி இல்லாமல் வேறு யாரவது இதில் சிக்கி இருந்தால் வெளியே வருவதற்க்கு திணறி இருப்பார்கள். அந்த அளவிற்கு படத்திற்கு விமர்சனங்கள் வந்தது” என வேதனையுடன் லிங்கு சாமி தெரிவித்துள்ளார். மேலும் அஞ்சான் திரைப்படம் உலகம் முழுவதும் 70 கோடி வரை வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.