Wednesday, November 29, 2023
HomeWeatherஇன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கோவை மற்றும்தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 24 மணிநேரதத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் காமராஜ் மீதான வழக்கு: எடுத்த நடவடிக்கை என்ன? – லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு!

வரும் மூன்றாம் தேதி குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பூர் மாவட்டத்திலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 4-ஆம் தேதி 12 மாவட்டங்களிலும்,  5-ஆம் தேதி 10 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது