நீங்கள் இல்லாமல் வெற்றிடம் போல உணருகிறேன் -கே.எல்.ராகுல் உருக்கம்.!

  • நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு தொடக்க வீரர் கே.எல்.ராகுல், காயத்திலிருந்து மீண்டு வரும் ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்ட்யா இருவரும் உரையாடினர்.
  • அப்போது பேசிய கே.எல்.ராகுல் “நீங்கள் இல்லாமல் டிரஸ்ஸிங் அறை காலியாக இருக்கிறது என கூறினார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளும் முதலில் டி 20 தொடரில் விளையாடினர். நேற்று மும்பையில் நடைபெற்ற கடைசி மற்றும் 3-வது டி 20 போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்தி  2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

நேற்றைய போட்டியில் தொடக்க வீரர்கள் ரோஹித் மற்றும் கே .எல் ராகுல் , இந்திய அணியின் கேப்டன் கோலி ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது.கேப்டன் கோலிக்கு தொடர் ஆட்ட நாயகன் விருதும் , கே .எல் ராகுலுக்கு ஆட்டநாயகன் விருதும் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல், காயத்திலிருந்து மீண்டு வரும் ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்ட்யா இருவரும் உரையாடினர்.

அப்போது கே.எல்.ராகுல் ஹார்டிக் பாண்ட்யாவிடம்  “நீங்கள் விரைவாக திரும்பி வருவதற்கு நாங்கள் காத்திருக்கிறோம்” என கூறினார்.மேலும் கூறுகையில், “நீங்கள் இல்லாமல் டிரஸ்ஸிங் அறை காலியாக இருக்கிறது. மற்ற அணியைப் பற்றி எனக்குத் தெரியாது. நீங்கள் ஸ்டாண்டில் உட்கார்ந்திருப்பதைக் கண்டேன் எனக்கு உத்வேகம் கிடைத்தது.” என கூறினார். இப்போட்டியில் கே .எல் ராகுல் வெறும் 56 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணியின் ஆல்ரவுண்டரும், வேகப்பந்து வீச்சாளரான ஹர்திக் பாண்டியா முதுகு பகுதியில் காயம் காரணமாக ஐந்து மாதங்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம்  துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் முதுகு பகுதியில் ஹர்திக் பாண்டியவிற்கு காயம் ஏற்பட்டது.

அதனால் அவர் தற்காலிகமாக சிகிச்சை பெற்று அணியில் விளையாடினர்.பின்னர் முதுகு பகுதி வலி அதிகரித்ததால் லண்டன் சென்று அறுவை சிசிக்சை செய்து கொண்டு வந்து உள்ளார்.அறுவை சிகிக்சை செய்ததால் ஐந்து மாதங்கள் ஓய்வு எடுக்கவேண்டும் என மருத்துவர்கள் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

author avatar
murugan