நடிகர் தனுஷ் உடன் நடிப்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம்!!பிரபல நடிகையின் ஓபன் டாக் !!!

நடிகை மஞ்சு வாரியர் மலையாள சினிமாவின் மிகச்சிறந்த நடிகை. இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றது. மேலும் இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

இந்நிலையில் இவர் நடித்த ‘ஹவ் ஒல்டு ஆர் யூ ‘ மலையாள படம் வெற்றிகரமாக திரையில் ஓடியது. இந்நிலையில் இந்த படத்தை தமிழில்’ 36 வயதினிலே ‘என்று  ரீமேக் செய்தனர். அந்த நடிகை ஜோதிகா நடித்து வெற்றி பெற்றார். தமிழில்’ 36 வயதினிலே படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையில் நன்கு ஓடியது.

இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷ் ‘ அசுரன் ‘ படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தில் நடிக்க நடிகைகள் தேர்வு நடை பெற்றது. அதில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்க தற்போது ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது குறித்து அவரிடம் கேட்டப் போது நடிகர் தனுஷுடன் நடிப்பதில் மிகவும் சந்தோசமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

 

Leave a Comment