ஆதாரங்கள் கொடுத்தால் நான் அரசியலில் இருந்து விலக தயார் – ஹேமந்த் சோரன் ..!

ஜார்கண்ட் மாநில முதல்வராக பொறுப்பில் இருந்த ஹேமந்த் சோரனை. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதனை அடுத்து, ஜார்கண்ட் மாநில புதிய முதல்வராக அமைச்சராக இருந்த  சம்பாய் சோரன்  தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார். சம்பாய் சோரன்  பெரும்பான்மையை காட்ட வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க, ஜார்கண்ட் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஹேமந்த் சோரணை காவல்துறையினர் சட்டசபைக்கு அழைத்து வந்தனர். இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை காவலில் உள்ள ஜார்கண்ட் முன்னாள் முதல்வரும், , ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன் சட்டப்பேரவையில் உறையாற்றினார்.

ஸ்பெயின் நாட்டில் தமிழர்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் உரை!

அப்போது” ஆளுநர் மாளிகையின் சதியே நான் கைது செய்யப்பட்டதற்கு காரணம், 8.5 ஏக்கர் நில மோசடி குற்றச்சாட்டின் பேரில் நான் இன்று கைது செய்யப்பட்டுள்ளேன். அவர்களுக்கு தைரியம் இருந்தால் என் பெயரில் பதிவு செய்யப்பட்ட நில ஆவணங்களை காட்டுங்கள், என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கொடுத்தால் நான் அரசியலில் இருந்து விலக தயார், பழங்குடியினரை மத்திய அரசு ஏன் இவ்வளவு வெறுக்கிறது.

தனது கைதுக்கு மத்திய அரசு சதியை காரணம், தன் கைது செய்யப்பட்ட ஜனவரி 31 இந்தியாவுக்கு கருப்பு நாள் ஏனெனில் முதல் முறையாக ஒரு முதலமைச்சர் அன்று கைது செய்யப்பட்டார். ஒவ்வொரு சதியையும் அம்பலப்படுத்துவேன். கண்ணீர் வடிக்காமல் எதிர்காலத்திற்காக காப்பாற்றுவேன், கண்ணீருக்கு மதிப்பு இல்லை மக்களே என்று அவர் கூறினார். இதில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டால் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவை சேர்ந்த சம்பாய் சோரன் ஜார்கண்ட் மாநில 12வது முதல்வராக தொடர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan

Leave a Comment