ஹைப்பர் சோனிக் அதிவேக விமான சோதனை வெற்றி – அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து.!

ஒடிசா கலாம் தீவில் நடைபெற்ற ஹைப்பர் சோனிக் அதிவேக விமான சோதனை வெற்றி அடைந்ததிற்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவிட்டுள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் உள்ள அப்துல்கலாம் தீவில் நடைபெற்ற இந்த சோதனையில் முற்றிலும் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஆளில்லா விமானம் இயக்கி வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. ஹைப்பர் சோனிக் என்ற ஒலியை மிஞ்சும் வேகத்தில் பறந்தது. இதன் மூலம் ஹைப்பர்சோனிக் வேகத்தில் செல்லும் விமானத்தை இயக்கும் இந்திய தொழில் நுட்பம் முழு வெற்றியை எட்டி உள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவரது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், ஆத்மனிர்பர் பாரதத் திட்டத்தின் பிரதமரின் பார்வையை உணர்ந்து கொள்வதற்கான இந்த மைல்கல் சாதனைக்கு டிஆர்டிஓவுக்கு நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திட்டத்துடன் தொடர்புடைய விஞ்ஞானிகளுடன் பேசினேன். இந்த பெரிய சாதனைக்கு அவர்களை வாழ்த்துகிறேன். இந்தியா அவர்களுக்கு பெருமை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும், டி.ஆர்.டி.ஓ இந்தியா இன்று வெற்றிகரமாக ஹைப்பர்சோனிக் டெக்னாலஜி டெமோன்ட்ரேட்டர் வாகனத்தை உள்நாட்டில் உருவாக்கிய ஸ்க்ராம்ஜெட் உந்துவிசை முறையைப் பயன்படுத்தி வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம், அனைத்து முக்கியமான தொழில்நுட்பங்களும் இப்போது அடுத்த கட்டத்திற்கு முன்னேற நிறுவப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்