ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்! வெற்றி கனியை பறிக்க போவது யார்?

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் 1,222 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

ஹைதராபாத்தில் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்த விபரம் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் மாநகராட்சியின் 150 வார்டுகளுக்கான தேர்தல் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற நிலையில், மாநில சட்டசபை தேர்தலை போல, ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலும் களைகட்டியது.

இந்நிலையில் இந்த தேர்தலில் தெலுங்கானாவின் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி, பாஜக, காங்கிரஸ் ஆகியவை தனித்து போட்டியிட்டன. ஹைதராபாத் மாநகராட்சியை கைப்பற்ற அனைத்து கட்சிகளும் தீவிர போட்டியில் ஈடுபட்டனர். இந்த தேர்தலுக்காக பாஜகவின் மூத்த தலைவர்களான உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இந்த மாநகராட்சி தேர்தலில் 1,222 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.