மனிதர்கள் பட்டாசுகளை வெடிப்பதுபோய், பட்டாசுகள் மனிதர்களை வெடிப்பது துயரமானது – வைரமுத்து

மனிதர்கள் பட்டாசுகளை வெடிப்பதுபோய், பட்டாசுகள் மனிதர்களை வெடிப்பது துயரமானது என்று பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இதுவரை 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், ஒருவர் கைது செய்தது காவல்துறை. இந்த துயர சம்பவம் அறிந்து பலரும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பட்டாசு ஆலை வெடிவிபத்து குறித்து பாடலாசிரியர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மனிதர்கள் பட்டாசுகளை வெடிப்பதுபோய், பட்டாசுகள் மனிதர்களை வெடிப்பது துயரமானது என்றும் அதனினும் பெருந்துயரம் மனித உயிர்களின் விலை சில லட்சங்கள் ஆகிப்போவது தான் எனவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்