கோடைகாலத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க ஐஸ்கட்டியை எப்படி பயன்படுத்துவது?

கோடை காலத்தில் நமது சருமத்தை பாதுகாப்பதற்கு ஐஸ்கட்டிகள் மிகவும் உதவுகிறது. ஐஸ்கட்டிகள் எப்படி சருமத்தைப் பாதுகாக்க உதவும் என பலருக்கும் கேள்விகள் எழலாம். ஆனால் கோடை காலத்தில் பாதுகாப்பாக இருப்பதற்கு ஐஸ் கட்டிகள் பல வழிகளில் உதவுகிறது. அவற்றை குறித்து நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

வெப்பத்தை உறிஞ்சும் ஐஸ்கட்டி

கோடைகாலத்தில் உடலில் ஏற்படக்கூடிய உஷ்ணத்தை குறைப்பதற்கு ஐஸ் கியூப்  உதவுகிறது. இதற்கு நாம் ஒரு சிறிய துணியில் ஐஸ் கட்டிகளை எடுத்துக் கொண்டு முகத்தில் லேசாக ஒத்தடம் கொடுக்கும் பொழுது முகத்தில் உள்ள உஷ்ணங்கள் குறைந்து சருமத்தை அழகுடன் பாதுகாக்கிறது.

பருக்கள் மறைய

கோடைக்காலம் என்றாலே பலருக்கும் பருக்கள் சொல்லாமலே வந்துவிடும். இதற்கு ஒரு துண்டில் ஐஸ்கட்டிகளைப் போட்டு 10 முதல் 15 நிமிடங்கள் வரை தடவி வர முகத்தில் உள்ள ரத்த நாளங்கள் கட்டுப்படுத்தப்பட்டு முகப்பருக்கள் முற்றிலும் குறைய வழிவகுக்கிறது.

கண் இமைகளுக்கு

நமது புருவங்களை கோடைகாலங்களில் சரி செய்யும் பொழுது லேசான சிறு காயங்கள் இருந்தாலும், அதிக அளவிலான எரிச்சல்களை ஏற்படுத்தும். இந்த எரிச்சலைப் போக்குவதற்கு ஐஸ் க்யூப்ஸ் புருவங்களுக்கு மேலாக மென்மையாக தேய்த்து வரும்பொழுது, நமது சருமத்தில் உள்ள வலியை குறைக்க உதவுவதுடன் இந்த வலியின் காரணமாக ஏற்படக்கூடிய அழற்சிகள் உண்டாகாமல் பாதுகாக்கிறது.

மசாஜ்

அதிகப்படியான வெயில் காரணமாக கோடை காலங்களில் நமது தோல் சொரசொரப்பாகவும் கருமை நிறமாக மாறிவிடும். இந்த நேரத்தில் நமது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் பொழுது மீண்டும் சருமம் பொலிவாக இயற்கை நிறத்துடன் காட்சியளிக்கும். இதற்கு நாம் ஐஸ்கட்டிகளை வைத்து உடலில் மசாஜ் கொடுக்கும் பொழுது நல்ல பலன் பெற முடியும்.

author avatar
Rebekal