அசத்தலான புதினா சப்பாத்தி செய்வது எப்படி?

புதினா கீரையின் இலை, தண்டு, வேர் என அனைத்து பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை. அதில், சுவையான புதினா சப்பாத்தி செய்வது எப்படி?

புதினா மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகை ஆகும். புதினா கீரையின் இலை, தண்டு, வேர் என அனைத்து பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை. இவை உடலுக்கு பொலிவையும், சுறுசுறுப்பையும் தருவதோடு, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. தற்போது இந்த பதிவில் சுவையான புதினா சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • புதினா – இரண்டு கட்டு
  • கோதுமை மாவு – 3 கப்
  • சோள மாவு – ஒரு கப்
  • இஞ்சி – சிறிதளவு
  • பூண்டு – 15 பல்
  • மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்
  • தயிர் – ஒரு கப்
  • வெல்லம் – 4 டேபிள்ஸ்பூன்
  • சீரகம் – 2 ஸ்பூன்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

புதினா சப்பாத்தி செய்வதற்கு முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு இஞ்சி, பூண்டு இரண்டையும் நீக்கி தோல் நீக்கி விட்டு மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சோள மாவு இரண்டையும் போட்டு அதனுடன் தயிர், வெல்லம், எண்ணெய், புதினா, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்தூள், சீரகம், தேவையான அளவு தண்ணீர், உப்பு ஆகியவற்றை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு மணி நேரத்துக்குப் பின் ஊற வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்திகளாக தேய்த்து தோசைக்கல்லில் போட்டு சப்பாத்திகளாக வார்த்தெடுத்தால் புதினா சப்பாத்தி தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.