உங்க வீட்டு குழந்தைகள் கீரை சாப்பிட இப்படி செய்து கொடுத்து பாருங்கள்..!கீரை வடை எளிமையாக செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்: உளுந்தம் பருப்பு-1 டம்ளர், கடலைப்பருப்பு-2டேபிள் ஸ்பூன், அரைக்கீரை – 1 கட்டு(பொடியாக நறுக்கியது), கருவேப்பிலை – 2 கொத்து பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய் – 3 பொடியாக நறுக்கியது, இஞ்சி -2 இன்ச் அளவு(பொடியாக நறுக்கியது), பெருங்காயத்தூள் – 1/4 கால் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர் தண்ணீரை வடிகட்டி கிரைண்டரில் போட்டு வடை மாவு போல அரைத்து கொள்ள வேண்டும். இந்த மாவில் நறுக்கி வைத்துள்ள அரைக்கீரை, கருவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயத்தூள் சேர்த்து இதனுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.  இப்பொழுது வடை மாவு தயாராகிவிட்டது. அடுப்பில் ஒரு கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். எண்ணெய் சூடானதும் எப்பொழுதும் மெதுவடை சுடுவது போல எண்ணெய்யில் போட்டு பொன்னிறம் வந்தவுடன் எடுக்க வேண்டும். அவ்வளவு தான் சூடான சுவையான ஆரோக்கியமான கீரை வடை ரெடி. இதை நிச்சயமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமாக சாப்பிடுவார்கள். கீரை வடையை வீட்டில் செய்து பாருங்கள்.

குறிப்பு: உளுந்து மாவின் அளவை விட கீரையின் அளவு அதிகமாக இருக்க வேண்டும்.

author avatar
Castro Murugan