ரேஷன் அரிசியில் சுவையான முறுக்கு செய்வது எப்படி? வாருங்கள் அறியலாம்!

எல்லாரும் வீட்டிலேயே ரேஷன் அரிசி இருக்கும். ஆனால் இந்த அரிசியை  வைத்து என்ன செய்வது என்று பலருக்கும் யோசனை இருக்கும். ரேஷன் அரிசியில் சுவையான மாலை நேர உணவுகள் பல செய்யலாம். இன்று ரேஷன் அரிசி முறுக்கு செய்வது எப்படி என்பது குறித்து நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • ரேஷன் அரிசி
  • காய்ந்த மிளகாய்
  • உடைத்த கடலை
  • ஓமம்
  • உப்பு
  • ள்ளு

செய்முறை

முதலில் ஒரு படி ரேஷன் அரிசியை சுத்தம் செய்து நான்கு ஐந்து முறை நன்றாக தண்ணீரில் அலசி ஊற வைத்துக் கொள்ளவும். அதன் பின்பாக ஒரு மிக்ஸி ஜாரில் 20 காய்ந்த மிளகாய் போட்டு பேஸ்ட் போல நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். 5 மணி நேரம் அரிசியை ஊற விடவும். மீண்டும் மிக்சி ஜாரில் உடைத்த கடலை போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின் ஊறவைத்த அரிசியை கிரைண்டரில் சேர்த்து 5 நிமிடம் தேவையான அளவு தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும்.
அதன் பின்பு அரைத்து வைத்துள்ள மிளகாய் பேஸ்டுடன் ஓமம் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து, அரிசி மாவையும் அதனுடன் கலந்து பொட்டுக்கடலை மாவையும் சேர்த்து, நன்றாக கிளறி வைத்துக் கொள்ளவும். அதன்பின் முறுக்கு பிழியும் அளவிற்கு மாவு கெட்டியானதும் முறுக்கு பிழியும் இயந்திரத்தில் வைத்து மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து போட்டு பிழிந்து சூடான எண்ணெயில் பொரித்தெடுத்தால்  அட்டகாசமான ரேஷன் அரிசி முறுக்கு வீட்டிலேயே தயார்.
author avatar
Rebekal