வீட்டிலேயே சுவையான பூரி குருமா செய்வது எப்படி? வாருங்கள் பார்க்கலாம்

பூரிக்கு ஏற்ற சுவையான உருளைக்கிழங்கு குருமா வீட்டிலேயே செய்வது

By Rebekal | Published: Jul 30, 2020 07:00 AM

பூரிக்கு ஏற்ற சுவையான உருளைக்கிழங்கு குருமா வீட்டிலேயே செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • உருளைக்கிழங்கு
  • வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • கடலை மாவு
  • கடுகு
  • கருவேப்பிலை
  • மஞ்சள் தூள்
  • உப்பு

செய்முறை

முதலில் உருளைக்கிழங்கை நன்றாக ஒரு சட்டியில் போட்டு அவிக்கவும். பின் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை வெங்காயம் ஆகியவற்றை போட்டு நன்றாக தாளிக்கவும். அதன் பின்பு அவிய வைத்துள்ள உருளைக்கிழங்கை எடுத்து லேசாக மசித்து வெங்காய சட்டியில் போட்டு நன்றாக தாளிக்கவும். அதன் பின்பு லேசாக உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.

பின் கடலை மாவை சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். வெங்காயம் உருளைக்கிழங்கு நன்கு வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி லேசாக கொதிக்கவிடவும். கொதி வந்ததும் கடலை மாவு கலவையை உள்ளே ஊற்றி 2 நிமிடம் கிளறி இறக்கினால் அட்டகாசமான பூரி குருமா தயார்.

Step2: Place in ads Display sections

unicc