சுவையான ட்ரை மேகி வீட்டிலேயே செய்வது எப்படி? வாருங்கள் பார்க்கலாம்

வீட்டிலேயே இப்பீ மேகியை வைத்து எப்படி ட்ரை மேகி செய்வது என பார்க்கலாம் வாருங்கள்.

தேவையான பொருள்கள்

  • இப்பீ மேகி
  • கொத்தமல்லி
  • வெங்காயம்
  • தக்காளி
  • பீன்ஸ்
  • கேரட்
  • உருளைக்கிழங்கு
  • முட்டை

செய்முறை

முதலில் பீன்ஸ், கேரட் மற்றும் உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி, அதனை நன்றாக பொரித்து எடுத்து வைத்துக்கொள்ளவும். அதன் பின்பு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துவிட்டு கிளறி எடுத்துவைத்துக்கொள்ளவும். அதன் பின்பு கடையில் வாங்கியுள்ள மேகியை உடைத்து வெந்நீரில் 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு வடித்து எடுக்கவும்.

பின்பு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம் போட்டு தாளித்து அதிகளவு தக்காளி சேர்த்து வதக்கவும். பின்பு அதில் தேவையான அளவு உப்பு, மேகி கவரில் இருக்கும் போடி மற்றும் சற்று மிளகாய் தூள் ஆகியவை கலந்து கிளறவும். பின் ஏற்கனவே எடுத்து வைத்துள்ள பொறித்த காய்கறிகள் மட்டும் முட்டையை போட்டு கிளறி இறக்கவும். அதன் பின்பு வடித்து வைத்துள்ள மேகியை போட்டு கிளறி கொத்தமல்லியை தூவினால் அட்டகாசமான ட்ரை மேகி தயார்.

author avatar
Rebekal