கேன்சர் செல்களை அழிக்கும் குடை மிளகாய் சட்னி எப்படி செய்யலாம் !!!!!!!!!!!!!

குடைமிளகாய் பொதுவாக  நாம் அதிகம் பயன்படுத்தும் காய்கறிகளில் ஒன்று .இதை நாம் அன்றாடம் நம் உணவில் பயன்படுத்தினால் நிறைய நன்மைகளை கொடுக்கும்.மேலும் இது கேன்சர்  செல்களை அழிக்கும் குணமுடையது .கேன்சர் செல்களை அழிக்கும் குடை மிளகாய் சட்னி எப்படி செய்யலாம் என்று  பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள் :

  • குடை மிளகாய் -2
  • நல்லெண்ணை-100
  • பச்சை மிளகாய் – 2
  • புளி -சிறிதளவு
  • கடுகு-1/2 தேக்கரண்டி
  • உளுந்து -1 தேக்கரண்டி
  • கொத்தமல்லி -சிறிதளவு
  • உப்பு -தேவையான அளவு

Related image
செய்முறை:
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணையை ஊற்ற  வேண்டும் .பின்பு அதில் குடை மிளகாயை சிறிது சிறிதாக நறுக்கி சேர்க்க வேண்டும்.மேலும் புளி,உப்பு , பச்சைமிளகாயை சேர்த்து நன்கு வதக்க  வேண்டும்.
குடைமிளகாய் , புளி, பச்சை மிளகாய் நன்கு வதங்கியவுடன் கொத்தமல்லி இலை களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.கொத்தமல்லி இலை வதங்கியவுடன் இறக்கி வைத்து விட்டு  பின்பு ஆறிய பின் அரைக்க வேண்டும் .
தாளிப்பதற்கு மீண்டும் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகை போட வேண்டும்.கடுகு நன்கு வெடித்தவுடன் அதில் உளுந்து போட்டு நன்கு வதக்க வேண்டும்.உளுந்து சிவந்தவுடன் அதை  இறக்கி அரைத்த குடை மிளகாய் கலவையுடன் கலக்க வேண்டும்.இப்போது குடை மிளகாய் சட்னி ரெடி.

Leave a Comment