தரமான தம் பிரியாணி செய்வது எப்படி தெரியுமா.!

சுவையான மற்றும் தரமான தம் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள். தேவையான

By bala | Published: May 31, 2020 11:00 AM

சுவையான மற்றும் தரமான தம் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:

1.தேங்காய் எண்ணெய்
2.கடலை எண்ணெய்
3.தயிர்
4.மல்லிச்செடி
5.புதினா இலை
6.கிராம்பு பட்டை ஏலக்காய்
7.மட்டன் கறி
8.தக்காளி
9.பெரிய வெங்காயம் & சின்ன வெங்காயம்
10.மிளகு
11.அரிசி

முதலில் ஒரு குடுவையில் தேங்காய் எண்ணையை ஊற்றவும் அடுத்ததாக கடலை எண்ணெய் என் தேவையான அளவு ஊற்றவும் அதன்பிறகு நெய் தேவையான அளவிற்கு ஊற்றிவிட்டு நீங்கள் வெட்டி வைத்த பெரிய வெங்காயத்தை அந்தக் குடுவையில் போட வேண்டும் பின் நன்றாக கலக்கி விடவும். அதன்பின் பச்சை மிளகாயை அந்தக் குடுவையில் போட்டு விடவும் அந்த பச்சை மிளகாவை  துண்டு துண்டாக வெட்டாமல் கீரி போடவும் அப்போது தான் சுவை நன்றாக இருக்கும் அதன் பிறகு நீங்கள் அரைத்து வைத்த இஞ்சி பூண்டு பேஸ்டை அந்தக் குடுவைக்குள் போட்டு நன்கு கலக்கவுவும். 

அதன் பிறகு அரைத்து வைத்த சின்ன வெங்காயத்தை அந்தக் குடுவைக்குள் போட வேண்டும், இஞ்சி பூண்டு பேஸ்ட் வெங்காயம் அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு வெட்டிவைத்த தக்காளியை அந்தக் குடுவைக்குள் போட்டு நன்கு கிண்டி விடவும், மேலும் அதன் பிறகு ஒரு பத்து மிளகை எடுத்து நன்கு தூவி விடவும் அடுத்ததாக மட்டன் கறி மசாலாவை போடவும் பிறகு தயிர் உங்களுக்கு தேவையான அளவிற்கு சேர்த்துக் கொள்ளவும் அதன் பிறகு வாங்கி வைத்த மட்டனை நன்கு கழுவி அந்த குடுவைக்குள் போட வேண்டும் அதற்குப் பிறகு நன்றாக அந்த மசாலா அந்த மட்டனில் படுமாறு நன்றாக கலக்கிவிட்டு மல்லி செடி ,மற்றும் புதினா இலை தேவையான அளவிற்கு போட வேண்டும் அதற்கு அடுத்து தேவையான உப்பை சேர்த்துக் கொள்ளவும்  10 நிமிடம் மட்டனை வேக விடவும். 

மேலும் நன்றாக கறி வேகும் வரை எண்ணெய் தனியாக வரும் வரை நன்றாக வேக விடவும் அதன் பிறகு 3 கப் தண்ணீர்  ஊற்றி விட்டு சிறிது நேரம் வேகவிடவும் அதன் பிறகு சீரக சம்பா அரிசியை நன்கு கழுவி விட்டு அந்தக் குடுவையில் போட்டு விட்டு நன்றாக அரிசியையும் வேகவிடவும் அதன் பிறகு ஒரு மூடிக்கொண்டு மூடிவிட்டு மேலை தம் போடவும், அடுத்ததாகா சிறிது இலையில் வைத்து சாப்பிட்டு பாருங்கள் 

 

Step2: Place in ads Display sections

unicc