உருளைக்கிழங்கு மற்றும் முட்டை வைத்து குழந்தைகளுக்கு விருப்பமான காலை உணவு எப்படி செய்வது?

குழந்தைகள் நாம் எவ்வளவு தான் ஆரோக்கியமாக நேரம் எடுத்து சமைத்து கொடுத்தாலும் அதை ஒழுங்காக சாப்பிடமாட்டார்கள். குழந்தைகளுக்கு என்ன உணவு செய்து கொடுப்பது என்று யோசிப்பதே பல தாய்மார்களுக்கு தலைவலி உருவாகி விடும். இன்று நாம் குழந்தைகளுக்கு முட்டை மற்றும் உருளைக்கிழங்கை வைத்து எப்படி அட்டகாசமான சுவையான காலை உணவை தயாரிப்பது என பார்க்கலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • முட்டை
  • உருளைக்கிழங்கு
  • வெங்காயம்
  • தனியா தூள்
  • மைதா
  • சீராக தூள்
  • மிளகு தூள்
  • உப்பு

செய்முறை

உருளைக்கிழங்கை நன்றாக கழுவி அதன் தோலை சீவி விட்டு தேங்காய் துருவல் போல துருவி எடுத்து வைத்து கொள்ளவும். அதன் பின்பு வெங்காயங்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உருளைக்கிழங்குடன் சேர்த்து கொள்ளவும். பின் இவற்றுடன் தனியா தூள், சீரக தூள், உப்பு, மிளகு தூள் ஆகியவை சேர்த்து கொள்ளவும்.

அதன் பின்பு முட்டையை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பில் தோசைக்கல் வைத்து அது சூடேறியதும், எண்ணெய் ஊற்றி இந்த கலவையை நாம் முட்டை பொறிப்பது போல போட்டு பொரித்து எடுத்து கொள்ள வேண்டும். இந்த காலை உணவு நிச்சயம் நமது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஒரு முறை உங்கள் வீட்டில் செய்து குட்டீசுக்கு பாருங்கள்.

author avatar
Rebekal