பிகில் படம் எப்படி இருக்கு தயாரிப்பாளர் கூறிய ஒரு வார்த்தை !

விஜய் தற்போது இரண்டு வேடங்களில் மிகவும் சிறப்பாக “பிகில்” எனும் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.மேலும்  இந்த படத்தில் யோகிபாபு , கதிர் மற்றும் பலர் இந்த படத்தில்  நடித்துள்ளார்கள்.
இதையடுத்து இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் இந்த அப்படத்தின் டீசர் அக்டொபர் முதல் வாரத்தில் வெளியாக இருப்பதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அவருடைய ட்விட்டரில் அறிவித்திருந்தார்.இந்நிலையில் இந்த படத்தை முழுமையாக பார்த்த தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் அளித்த பேட்டியில் , படம் புயூர் என்டர்டைன்மெண்ட்  வெறித்தனம் என்றும் கூறியுள்ளார்.மேலும் அவர் “பிகில்” ரியாலிட்டி கதை என்றும் படம் சர்வதேச தரத்தில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.