கொரோனா வைரஸுடன் வாழ்வது எப்படி? மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் வழங்கிய 5 ஆலோசனைகள்!

மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன், கொரோனா வைரஸுடன் வாழ்வது

By leena | Published: Jun 03, 2020 08:00 AM

மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன், கொரோனா வைரஸுடன் வாழ்வது எப்படி? என்பது குறித்து, ஐந்து ஆலோசனைகளை தெரிவித்துள்ளார்.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால், இதுவரை உலக அளவில், 6,388,281 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 377,881 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவை பொறுத்தவரையில், இதுவரை இந்த வைரஸ் தாக்கத்தால், 1,97,905 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5604 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன், கொரோனா வைரஸுடன் வாழ்வது எப்படி? என்பது குறித்து, ஐந்து ஆலோசனைகளை தெரிவித்துள்ளார்.

  • வீட்டை விட்டு நம் எங்கு வெளியே சென்றாலும், முக கவசம் அணியும் பழக்கத்தை கைக்கொள்ள வேண்டும். 
  • எப்பொழுதும் நமது கைகள் சுத்தமாக இருக்க வேண்டும். 
  • தனி நபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 
  • நமது உடலில், ஆரோக்கியத்திற்கு மாறான சூழ்நிலை ஏற்படும் போது, மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 
  • நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும். 
Step2: Place in ads Display sections

unicc