அதிகமாகச் சிந்திப்பதை எவ்வாறு கட்டுப்படுத்துவது??

அதிகப்படியான சிந்தனை ஒரு பழக்கமாக மாறி, விரைவில் உங்கள் மன அமைதியையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கத் தொடங்குகிறது. அதிகப்படியான எண்ணங்கள் நம்மை வருத்தமடையச் செய்கின்றன, நம்மைத் துன்பப்படுத்துகின்றன, உண்மையான உலகத்திலிருந்து நம்மைப் பிரிக்கின்றன.

அதிகப்படியான சிந்தனையை கையாள்வது எப்படி??

உங்களை அறிந்து கொள்ளுங்கள்: நம்மை நன்றாக அறிந்து கொள்ள நம் எண்ணங்களுடன் நேரத்தை செலவிடுவது அவசியம், ஆனால் தேவைக்கு அதிகமாக அவற்றில் மூழ்குவது ஆரோக்கியமற்றதாகிவிடும். உங்கள் எண்ணங்களை அறிந்து புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நமக்குள் எதனால் இந்த எண்ணங்கள் தோன்றுகிறது என்பதை குறித்து பகுத்தறிய தொடங்கலாம்.

உங்கள் கடந்த காலத்தையும் அச்சங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள்: பெரும்பாலும், அதிகமாகச் சிந்திப்பது நமது அச்சங்கள் மற்றும் அனுபவங்களிலிருந்து பிறக்கிறது. நாம் கடந்த காலத்திலிருந்து வருத்தங்களையும் குற்ற உணர்வையும் சுமக்கிறோம். அதிகமாகச் சிந்திப்பதை நிறுத்துவதற்கான ஒரு படி, உங்கள் குறைபாடுகள், தவறுகள் மற்றும் அச்சங்களை ஏற்றுக்கொள்வது. கடந்த காலத்தில் என்ன நடந்தவற்றை மாற்றுவதற்கான சக்தியை நாம்  கொண்டிருக்கவில்லை. எனவே உங்களை நீங்கள் ஏற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். காலப்போக்கில், நீங்கள் நிகழ்காலத்தில் அதிக கவனம் செலுத்த கற்றுக்கொள்வீர்கள்.

மன அழுத்தம் மற்றும் எதிர்மறையை விடுவிக்கவும்: நாம் எதிர்மறையால் சூழப்பட்டிருப்பதாலும், மன அழுத்தம் நம் உடலில் உருவாகியிருப்பதாலும் அதிகமாகச் சிந்திப்பதில் நேரத்தை செலவிடுகிறோம். நீங்கள் இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் தியானம் செய்து உங்கள் நாளை மதிப்பிடுவது நல்லது. அன்று உங்களுக்கு நடந்த நல்ல விஷயங்களைப் பாராட்டுங்கள் மற்றும் உங்கள் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.

கண்ணாடி சிகிச்சை: அதிகப்படியான சிந்தனையின் பக்க விளைவுகளில் ஒன்று சுய சந்தேகம். நமது சுய-சந்தேகங்கள், எந்த முடிவும் எடுப்பதிலிருந்து நம்மைத் தடுக்கின்றன. சுய சந்தேகத்தை போக்க ஒரு வழி கண்ணாடி சிகிச்சை. கண்ணாடி சிகிச்சையில், ஒரு கண்ணாடி முன் நின்று, நீங்கள் ஒரு நம்பிக்கையான நபர் என்று சொல்லுங்கள், உங்கள் உடலையும் மனதையும் பாராட்டுங்கள், உங்கள் உள் கவர்ச்சியான புத்திசாலித்தனத்தை நினைவூட்டுங்கள். இது ஒரு வழக்கமாக மாறியதும், குறைபாடுகளைப் பார்ப்பதற்குப் பதிலாக, உங்களிடம் உள்ள நேர்மறையை நீங்கள் கவனிப்பீர்கள், மேலும் சுய நம்பிக்கையை உணருவீர்கள்.

author avatar
Dhivya Krishnamoorthy

Leave a Comment