எந்தெந்த அரசு சேவைக்கு எவ்வளவு லஞ்சம்? பட்டியல் வெளியிட்ட கமல்!

பிறப்பு முதல் இறப்பு வரையிலான சான்றிதழ்களுக்கும், சேவைகளுக்கும் தமிழகம் முழுக்க நடைமுறையில் இருக்கும் லஞ்சப் பட்டியல் இது.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அவர்கள், திருச்சியில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவரிடம், நீங்கள் ஊழல், லஞ்சம் பற்றி கூறினீர்கள். இந்த ஊழல் ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே காணப்படுகிறது. பொதுமக்கள் இதை பழகிவிட்டார்கள். எனவே, தற்போது நீங்கள் முன் வைக்கும் ஊழல் ஒழிப்பு கருத்துக்கள் மக்களை சென்றடையுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்க்கு பதிலளித்த கமலஹாசன், ‘ மக்கள் பழகிவிட்டார்கள் என்பதற்காக அப்படியே விட்டுவிட முடியுமா? இந்த ஊழலை ஒழிக்க எங்களால் முடியும். நாங்கள் ஊழலை ஒழிக்க முன்னெடுக்கும் முயற்சிகள் பொதுமக்களை கண்டிப்பாக சென்றடையும்.

இதனையடுத்து, எந்தெந்த அரசு சேவைக்கு எவ்வளவு லஞ்சம் வாங்கப்படுகிறது என்ற பட்டியலை கமலஹாசன் வெளியிட்டுள்ளார். இந்த பட்டியலை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு, பிறப்பு முதல் இறப்பு வரையிலான சான்றிதழ்களுக்கும், சேவைகளுக்கும் தமிழகம் முழுக்க நடைமுறையில் இருக்கும் லஞ்சப் பட்டியல் இது. மறைக்க முடியுமா? மறுக்க முடியுமா? மறக்க முடியுமா? என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.