,

இன்றைய (21.03.2023) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ.!

By

மேஷம்:

இன்று உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும் நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் திறமையை வெளிக்காட்ட வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு தலைவலி ஏற்படும்.

ரிஷபம்:

இன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் வேலையை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

மிதுனம்:

இன்று நீங்கள் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளதால் நிதானமாக செயல்பட வேண்டும். வேலை செய்யும் இடத்தில் அதிக பணிச்சுமை  இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு தொடை வலி ஏற்படும்.

கடகம்:

இன்று நீங்கள் எதிர்மறையான எண்ணங்களை சந்திப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் புத்துணர்ச்சி இருக்காது. பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு வயிற்று சம்பந்தப்பட்ட பிரச்சினை ஏற்படும்.

சிம்மம்:

இன்று உங்களுக்கு தொலைதூர நண்பர்கள் மற்றும் உங்களுடைய நெருங்கிய நண்பர்கள் ஆதரவு கொடுப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் சக பணியாளர்களுடன் நல்லுறவை பின்பற்றுவீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று தலைவலி ஏற்படும்.

கன்னி:

இன்று நீங்கள் கவலையுடன் காணப்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பணியை  குறித்த நேரத்தில் முடிக்க முடியாது.பணத்தை இழப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

துலாம்:

இன்று நீங்கள் சற்று மந்தமாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணியை குறித்து நேரத்தில் முடிப்பது கஷ்டமாக இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும்.  ஆரோக்கியத்தை பொருத்தவரை கால் வலி ஏற்படும்.

விருச்சிகம்:

இன்று உங்களுக்கு பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பொறுப்புடன் பணியாற்றுவீர்கள். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.  ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

தனுசு:

இன்று நீங்கள் கடினமான சவால்களை சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் சவாலான சூழ்நிலைகள் சந்திக்க நேரிடும். பணவரவு அதிகமாக இருக்காது. ஆரோக்கியத்தை பொருத்தவரை தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

மகரம்:

இன்று நீங்கள் உங்களுடைய முயற்சிகளின் மூலம் வெற்றியை காண்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரியிடம் பாராட்டுகளை பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

கும்பம்:

இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. வேலை செய்யும் இடத்தில் பணியை கையாள்வது அவ்வளவு அருமையாக இருக்காது. நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்காது. ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு முதுகு வலி ஏற்படும்.

மீனம் :

என்று நீங்கள் மிகவும் முக்கியமான விஷயங்களை எடுக்க வேண்டும் என்றால் அதனை நாளைக்கு தள்ளிப் போடுங்கள். வேலை செய்யும் இடத்தில் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது. நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்காது . ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு இன்று தலைவலி ஏற்படலாம்.

Dinasuvadu Media @2023