Tips : இல்லத்தரசிகளே..! இதுவரை அறிந்திராத சூப்பர் டிப்ஸ் இதோ..!

குடும்ப பெண்கள் தங்களது பெரும்பாலான நேரத்தை சமையலறையில் தான் செலவிடுவர். ஆனால், சமையலறை குறித்த சில டிப்ஸ்கள் பல பெண்களுக்கு தெரிவதில்லை. தற்போது இந்த பதிவில் பெண்கள் இதுவரை அறிந்திராத சில டிப்ஸ்கள் பற்றி பார்ப்போம்.

நமது வீடுகளில் தேவையில்லாத சாக்ஷுக்கள் இருக்கும். இந்த சாக்ஷுக்களை நாம் தூக்கி எரியாமல், அதனை துடைப்பத்தின் கைப்பிடி பக்கம் மாட்டி கட்டி வைத்தால், துடைப்பம் கைகளை உறுத்தாமல் இருக்கும்.

பெரும்பாலும் நமது வீடுகளில் கண்ணாடி செராமிக் பாத்திரங்கள் காணப்படுவதுண்டு. இந்த பாத்திரங்களை கழுவும் போது, காபி போன்ற பொருட்களை வைத்து துலக்குவதை தவிர்த்து விடுங்கள். அப்படி துலக்குவதால் பாத்திரத்தில் கீறல் விழுந்துள், பாத்திரத்தின் அழகை கெடுத்துவிடும். எனவே இந்த பாத்திரங்களை சிறப்பை பயன்படுத்தி கழுவினால் பாத்திரம் புதிது போல காணப்படும்.

அதேபோல் நமது வீடுகளில் வாஷ்பேஸின்கள் காணப்படுவதுண்டு. இந்த பேஷின்களை நாம் அவ்வப்போது துணிகளுக்கு பயன்படுத்தக்கூடிய நீளம் கலந்த தண்ணீரை ஊற்றி கழுவினால் பளபளப்பாக இருக்கும்.  நமது வீடுகளில் உள்ள வெள்ளி பாத்திரத்தில் கருமை படராமல் தடுக்க, அவற்றை அடுக்கி வைக்கும் போது இடையிடையே கற்பூர வில்லைகளை போட்டு வைத்தால் புதிதாக அப்படியே இருக்கும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.