புதிய மேஜிக் புக் லேப்டாப் மாடலை அறிமுகப்படுத்தும் ஹானர் நிறுவனம்..!

 

ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் தற்சமயம் புதிய மேஜிக் புக் என்கிற லேப்டாப் மாடலை அறிமுகப்பத்தியுள்ளது, மேலும் இந்த லேப்டாப் மாடல் சீனாவில் தற்சமயம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக உயர் செயல்திறன் மற்றும் நேர்த்தியான வடிவமைப்பை கொண்டு இந்த லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மேஜிக் புக் லேப்டாப் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் என்று ஹானர் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் இப்போது மேக்புக் தொடர் லேப்டாப் மாடல்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது, அதற்கு போட்டியா வெளிவந்துள்ளது இந்த மேஜிக் புக் லேப்டாப் மாடல். குறிப்பாக பட்ஜெட் விலையில் சிறந்த மென்பொருள் அம்சங்களுடன் இந்த மேஜிக் புக் லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த லேப்டாப் மாடல்.

ஹானர் மேஜிக் புக் லேப்டாப் மாடல் பொறுத்தவரை 14-இன்ச் எப்எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 5.2mm தடித்த எல்லைகளுடன் 80% திரை விகதிதத்தில் இந்த லேப்டாப் மாடல் கிடைக்கும். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேஜிக் புக் லேப்டாப் பொறுத்தவரை கிளாசியர் சில்வர்,ஸ்டார் க்ரே மற்றும் நெபுலா பர்பில் போன்ற நிங்களில் கிடைக்கு என்று ஹானர் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 1.45 கிலோ எடைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப், பின்பு பயனத்தின் போது மிக எளிமையாக எடுத்து செல்ல வசதியாக இருக்கும் இந்த மேஜிக் புக் சாதனம்.

இந்த மேஜிக் புக் லேப்டாப் சாதனம் 8-வது ஜென் இன்டெல் கோர் i7-8550U செயலியைக் கொண்டுள்ளது, பல்வேறு மென்பொருளை இயக்க அருமையாக இருக்கும் இந்த மேஜிக் புக் லேப்டாப் சாதனம். மேலும் Nvidia MX150 GPU மற்றும் 2GB of GDDR5 சேமிப்பு ஆற்றலை கொண்டுள்ளது இந்த மேஜிக் புக் சாதனம். குறிப்பாக கிராபிக்ஸில் 4x செயல்திறனை வழங்குகிறது இந்த சாதனம்.

ஹானர் அறிமுகப்படுத்தியுள்ள புதிய லேப்டாப் சாதனத்தில் 57.4வாட் பேட்டரி பொறுத்தப்பட்டள்ளது, குறிப்பாக 12மணி நேரம் வரை பேட்டரி ஆயுள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனம் 1080 பிக்சல் திர்மானம் கொண்டவையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய மேஜிக் புக் லேப்டாப் பொறுத்தவரை விண்டோஸ் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் ஆட்டோமெடிக் லாக் மற்றும் அன்லாக் வசதியைக் கொண்டுள்ளது இந்த லேப்டாப் மாடல்.குறிப்பாக கைரேகை சென்சார் வசதிக் கொண்டுள்ளது இந்த லேப்டாப் மாடல்.

இந்த சாதனத்தில் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இந்த லேப்டாப் மாடலின் ஆரம்ப விலை ரூ. 52, 300-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment