Rain Breaking: கரூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

மாண்டஸ் புயல் எதிரொலியாக ஏற்கனவே 24 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • இந்நிலையில் கரூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்திற்க்கு உட்பட்ட கிருஷ்ணகிரி, பர்கூர்,காவேரிப்பட்டினம்,மத்தூர்,ஊத்தங்கரை ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மாண்டஸ் புயல் எதிரொலியாக ஏற்கனவே 24 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், கடலூர், வேலூர், திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ,கள்ளக்குறிச்சி, சேலம்,நாமக்கல், தர்மபுரி, திருவண்ணாமலை, நாகை, திருப்பத்தூர்,இராமநாதபுரம், மற்றும் சிவகங்கை ஆகிய 24 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu Web

Leave a Comment