வரலாற்றில் இன்று(14.05.2020)... அல்லாடி கிருஷ்ணசாமி அவர்கள் பிறந்த தினம் இன்று...

இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினரான அல்லாடி கிருஷ்ணசாமி  அவர்கள்

By kaliraj | Published: May 14, 2020 06:11 AM

இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினரான அல்லாடி கிருஷ்ணசாமி  அவர்கள்  பிறந்த தினம் இன்று. இவர் குறித்த சிறிய தொகுப்பு உங்களுக்காக... இவர் மே மாதம் 14ஆம் நாள் 1883ஆம் ஆண்டு  பிறந்தார். சென்னை மாகாணத்தின், தற்போதைய ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள புதூர் கிராமத்தில் 1883இல் பிறந்த அல்லாடி கிருஷ்ணசாமியின் தந்தை ஏகாம்பர சாஸ்திரி ஒரு கோயில் பூசாரி ஆவார். 1899இல் பள்ளிப் படிப்பை முடித்த கிருஷ்ணசாமி சென்னை கிறித்தவக் கல்லூரியில் வரலாறு படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் வழக்கறிஞர் படிப்பை, சென்னை சட்டக் கல்லூரியில் முடித்தவர். பின்னர் வெங்கலட்சுமியை மணந்தார்.இவர் சென்னை மாகானத்தின்  வழக்கறிஞரும், பின்னாளில்  இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின்  உறுப்பினரும் ஆவார். மேலும் இவர் 1929 முதல் 1944 வரை  சென்னை மாகாண அரசின் தலைமை வழக்கறிஞராகப் பணியாற்றியவர்.அல்லாடி கிருஷ்ணசாமியின் மகன் அல்லாடி குப்புசாமி, தன் தந்தையின் நினைவாக, சென்னையில் 1983இல் அல்லாடி நினைவு அறக்கட்டளையை நிறுவினார். இவர் ஏப்ரல் மாதம் 2ஆம் நாள் 1958ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார்.

Step2: Place in ads Display sections

unicc