ஜம்மு-காஷ்மீரில்  அதிவேக இணைய சேவைக்கு தடை

ஜம்மு-காஷ்மீரில்  அதிவேக இணைய சேவைக்கான  தடையை வரும் ஆகஸ்ட் 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது .

ஜம்மு காஷ்மீரில்  அதிவேக இணைய சேவைக்கான தடை வரும் ஆகஸ்ட் 19 வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .இதுகுறித்து முதன்மை செயலாளர் இல்லம் வெளியிட்டுள்ள உத்தரவில் பாதுகாப்புப் படையினர், அரசியல் தலைவர்கள்  மற்றும் அப்பாவி பொதுமக்கள் மீதான தாக்குதல்களுக்காக திட்டமிடுவதை தவிர்ப்பதற்காக மொபைல் மூலமாக அதிவேக இணைய சேவையை பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் அவசியமாகியுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு  ஆகஸ்ட் 5 ம் தேதி ஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கான  சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப் பிரிவு ரத்து செய்யப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். பின்பு அதற்கான அரசாணை  வெளியிடப்பட்டது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைய உள்ளதால் , வரும் வாரங்களில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு அதிவேக இணையத்திற்கான தடை ஆகஸ்ட் 19 வரை நடைமுறையில் இருக்கும், மேலும் மொபைல் தரவுக்கான இணைய சேவை 2 ஜி வேகத்தில் கிடைக்கும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Castro Murugan