26 வயதான பெண்ணின் 33 வார கருவைக் கலைக்க உயர் நீதிமன்றம் அனுமதி!

33 வார கர்ப்பிணிப் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி.

26 வயதாகும் பெண்ணின் 33 வார கருவை கலைக்க, அவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கருவை கலைக்க மருத்துவமனை அனுமதி மறுத்த போதிலும் பெண்ணின் கோரிக்கையை ஏற்று டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கருவை கலைப்பது பற்றி தாய் எடுக்கும் முடிவே இறுதியானது என டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரதீபா சிங் கருத்து தெரிவித்துள்ளார். கருவிற்கு மூளை வளர்ச்சி குறைபாடு இருப்பது தெரிந்ததால் கருவை கலைக்க கோரியபோது, மருத்துவமனை நிர்வாகம் அதற்கு மறுத்த நிலையில், நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்த நிலையில், 33 வார கர்ப்பிணிப் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment