முதலாளியின் 100வது பிறந்தநாளுக்கு Hero கொடுத்த ‘ஷாக்’ சர்ப்ரைஸ்.! Hero CE001 ‘100’ மட்டுமே..!

ஹீரோ குழுமத்தின் நிறுவனர் டாக்டர் பிரிஜ்மோகன் லால் முன்ஜான் , கடந்த 1923, ஜூன் 1ஆம் தேதி பிறந்தார் . தனது 95வது வயதில் நவம்பர் 1, 2015இல் உயிரிழந்தார்.  இவரது நூற்றாண்டு பிறந்தநாளை Hero நிறுவனம் இந்த வருடம் கொண்டாடி வருகிறது. அதனை முன்னிட்டு இதுவரை இல்லாத அளவில் ஓர் பிரத்யேக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆயிரம் ரூபாய்க்கு இயர்பட்ஸ் தேடுறீங்களா? உங்களுக்காகவே வந்தது Fire Pods Zeus!

100 பைக் மட்டுமே…

பிரிஜ்மோகன் லால் முன்ஜான் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு HERO CE001 எனும் புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் என்ன ஷாக் சர்ப்ரைஸ் என்றால், இந்த புதிய மாடல் குறைந்த அளவே உற்பத்தி செய்யப்படும் Limited Edition எனும் வகையில் 100 எண்ணிக்கையிலான பைக் மட்டுமே தயாரிக்கப்பட உள்ளதாம்.

Hero Karizma XMR 210 :

பிரிஜ்மோகன் லால் முன்ஜான் ஹீரோ நிறுவன தலைவராக இருந்த காலத்தில் தான் இளைஞர்கள் மத்தியில் தற்போதும் ஒரு விருப்ப தேர்வு பைக்காக இருக்கும் கரிஸ்மா அறிமுகம் செய்யப்பட்டது. அதன் நினைவாக, Hero CE001 எனும் வாகனம் தற்போதுள்ள கரிஷ்மா வகை புதிய மாடலான  Hero Karizma XMR 210ஐ அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் புக்கிங் :

இந்த பைக் ஹீரோ நிறுவனரின் 100வது பிறந்தநாள்  ஆண்டை குறிப்பிடும் வகையில் 100 எண்ணிக்கை மட்டுமே தயார் செய்யப்பட உள்ளது எனவும், அதுவும் இந்த பைக்கை ஆன்லைனில் மட்டுமே புக்கிங் செய்ய முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. புக்கிங் செய்த அனைவருக்கும் 2024, ஜூலை 1ஆம் தேதிக்குள் டெலிவரி செய்யப்படும் எனவும் ஹீரோ நிறுவனம் கூறியுள்ளது.இதன் விலை பற்றிய விவரங்களும் முழுமையாக வெளியாகவில்லை. ஹீரோ கரிஷ்மா XMR-இன் எக்ஸ்ஷோரூம் விலை 1.79 லட்சம் ரூபாய் முதல் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பம்சங்கள் :

இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட மிகவும் சிறப்பு வாய்ந்த பைக் எனும் விளம்பரத்தோடு இந்த பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாடல், வாகனத்தின் எடையை குறைத்து திறனை அதிகரிக்கும் வகையில் கார்பன் ஃபைபர் மூலம் இந்த பாடி  வடிவமைக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டுபவரின் வசதிக்காக இந்த பைக், நிமிர்ந்து சவாரி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

ஹீரோ கரிஸ்மா எக்ஸ்எம்ஆர் (Hero Karizma XMR), 25 பிஎச்பி மற்றும் 20 என்எம் டார்க்கை (திறன்) உற்பத்தி செய்யும் ஆற்றல் வாய்ந்த 210 சிசி சிங்கிள்-சிலிண்டர், லிக்விட்-கூல்டு எஞ்சின் கொண்டுள்ளது. CE001 ஆனது ஒரு சிறந்த பவர் , அதற்கேற்ற நிதானமான எடை விகிதத்தை கொண்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment