படத்தை விளம்பரம் செய்ய கமலிடம் கத்துக்கோங்க.., 20 வருட சம்பவத்தை களமிறங்கிய ஆண்டவர்.! வீடியோ இதோ..,

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “விக்ரம்”. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா போன்ற பலர் நடித்துள்ளார்கள். ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியீட தொடங்கிவிட்டது. அதன்படி, இன்று தான் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ப்ரோமோவில் ” 20 வருடத்திற்கு முன்பு, கமல், ஜெயராம், யூகி சேது, ரமேஷ் அரவிந்த், ஸ்ரீமன் என பலர் நடித்து வெளியான திரைப்படம் பஞ்சதந்திரம். இந்த படத்தில் இடம்பெற்றிருந்த காமெடியை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

அந்த திரைப்படத்தில் நடித்த யூகி சேது விக்ரம் படத்தின் விளம்பரத்தை பார்த்து தவறுதலாக புரிந்து கொண்டு ஸ்ரீமன், ரமேஷ் அரவிந்த்,  ஜெயராம் ஆகியோருக்கு போன் கால் செய்வது போல ஒரு வீடியோவை எடுத்து அதனை  விக்ரம் படத்தின் விளம்பரத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ப்ரோமோவை கமல் யோசித்து எடுத்துள்ளார். ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்கள் ஒரு படத்தை விளம்பரம் செய்ய கமலிடம் கத்துக்கோங்க என தெரிவித்து வருகிறார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment