ஜெயில் படத்தின் செக்கன்ட் சிங்கிளான 'பத்துக்காசு' பாடலின் புரோமோ வீடியோ இதோ.!

ஜெயில் படத்தின் செக்கன்ட் சிங்கிளான 'பத்துக்காசு' பாடலின் புரோமோ வீடியோ இதோ.!

  • jail |
  • Edited by ragi |
  • 2020-08-15 17:30:29
ஜி. வி. பிரகாஷ் குமார் நடித்து இசையமைக்கும் ஜெயில் படத்தின் செக்கன்ட் சிங்கிளான பத்துக்காசு படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ஜெயில். இந்த படத்தில் ஜிவி நடித்து இசையமைத்துள்ளார்.மேலும் அபர்னாதி, ராதிகா சரத்குமார், யோகிபாபு, ரோபோ சங்கர், பிரேம்கி அமரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

சமீபத்தில் கூட இந்த படத்திலுள்ள 'காத்தோடு காத்தானேன் ' என்ற தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி பாடியுள்ள பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது அதனையடுத்து ஜெயில் பட செக்கன்ட் சிங்கிளான' பத்துகாசு ' என்ற பிரண்ஷிப் பாடல் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த பாடலின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. தெருக்குறள் அறிவு வரிகள் எழுத ஜி. வி பிரகாஷ் பாடியுள்ள இந்த பாடலின் புரோமோ வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

  ]]>

Latest Posts

விவசாயிகளுக்கு எந்த சூழலிலும், எந்த பாதிப்பும் ஏற்படாது - அமைச்சர் தங்கமணி
வேளாண் மசோதாவை எதிர்த்து ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம்.!
கேரளாவில் இதுவரை 95,702 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.!
சென்னையில் இன்று ஒரே நாளில் 996 பேருக்கு கொரோனா..!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 60 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் இதுவரை 4,86,479 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ்.!
#BREAKING: தமிழகத்தில் இன்று 5,516 கொரோனா.! 60 பேர் உயிரிழப்பு.!
"கொரோனா பரவலின் இரண்டாம் அலை தவிர்க்க முடியாதது!"- பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
இந்தியாவின் முதல் இலவச WiFi விமானம்.. விஸ்டாரா நிறுவனம் அறிவிப்பு.!
‘ஆன்லைன் அரசியல் இயக்கமாக மாறிவிட்டது திமுக’ - அமைச்சர் கடம்பூர் ராஜூ.!