செலவே இல்லாமல் சிகப்பழகான உதடு பெற சில இயற்கை வழிமுறைகள் இதோ!

உடலின் ஒவ்வொரு அங்கமும் முக்கியமானதாக இருந்தாலும் முகத்தின் அழகை பிரதிபலிக்கும் கூடியது உதடு என்றுதான் சொல்லியாக வேண்டும். இந்த உதடு சிவப்பாக இருக்க வேண்டும் என அனைவருமே விரும்புவது வழக்கம். இதற்கான சில இயற்கையான குறிப்புகள் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

சிகப்பழகான உதடுகளுக்கு ….

உதடுகளை மென்மையாக சுத்தமாக பராமரித்தால் இயற்கையான சிகப்பழகு உடன் நாம் வைத்திருக்க முடியும். சிலருக்கு இயற்கையிலேயே உதடுகள் சற்று கருப்பு நிறமாக காணப்படும். இது அவர்களுக்கு பிடிக்காது, இதற்காக சில செயற்கை க்ரீம்களை வாங்கி உபயோகித்து பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடுகிறது. இதற்கு மாற்றாக மாதுளம் பழச் சாறுகளை உதடுகளின் மீது பூசி வரும்பொழுது அது உதட்டை நாளடைவில் சிகப்பழகாக்கும். இது போல புதினா இலைகளை அரைத்து அவ்வப்போது உதடுகளில் பூசலாம். அரைத்து பூசா விட்டாலும் ஒரு இலையை எடுத்து அதை கசக்கி விட்டு பூசலாம். மேலும் கற்றாழை உதட்டின் கருமை மறைய செய்வதுடன், உதட்டில் உள்ள இறந்த செல்களை அகற்ற உதவுகிறது.

கொத்தமல்லி சாரும் இதேபோல இயற்கையான சிகப்பு அழகு கொண்ட உதட்டை உருவாக்குவதற்கு காரணமாக அமைகிறது. மேலும் எலுமிச்சம் பழத்துடன் லேசாக உப்பு சேர்த்து உதட்டில் தேய்த்து வரும்பொழுதும் இறந்த செல்கள் நீங்கி புதிய செல்கள் உருவாகி அழகான உதடு பெறமுடியும். இதேபோல ஆரஞ்சு பழம் நெல்லிக்காய் சாறு ஆகியவையும் பூசலாம். பீட்ரூட் தொடர்ச்சியாக உதட்டில் பூசி வரும்பொழுதும் உதட்டின் கருமை நீங்கும், மேலும் ஜாதிக்காய் பூசி வரலாம். மேலும் நெய் அல்லது வெண்ணெய் ஆகியவற்றையும் பூசி வரலாம். இதை அத்தனையும் பூச வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த நேரம் உங்கள் கையில் எது கிடைக்கிறதோ வீட்டிலுள்ள நெய், வெண்ணை, கற்றாழை, மாதுளம் பழம் எலுமிச்சம்பழம் என அவ்வப்போது எது கிடைக்கிறதோ அதை உங்கள் உதட்டில் பூசி வரும் போது இயற்கையான சிகப்பழகு உள்ள உதட்டுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

author avatar
Rebekal