இனிமேல் பள்ளிகளில் கம்மல், செயின், காப்பு போன்றவற்றை அணிய தடை – சமூக பாதுகாப்புத் துறை அதிரடி உத்தரவு

பள்ளிகளில் மாணவர்கள் கம்மல், செயின், காப்பு, கைகளில் கயிறு  போன்றவற்றை அணிய தடை விதித்து சமூக பாதுகாப்பு நலத்துறை உத்தரவு. 

தமிழகத்தில் சமீப நாட்களாக பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல் அதிகரித்து வருகிறது. தங்களது சாதியை அடையாளப்படுத்தும் கயிறுகளை கையில் அணிந்து கொண்டு பல ஜாதி குழுக்களாக பிரிந்து உணவு இடைவெளியின்போதும், விளையாட்டு நேரங்களிலும் மோதலில் ஈடுபட்டுவது வழக்கமாகி வந்தது.

இந்த நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சமூக பாதுகாப்புத்துறை சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளத. அதன்படி ஜாதியை வெளிப்படுத்தும் கயிறு அணிவதை தடுக்கும் நோக்கத்தில் இனி கைகளில் கயிறு கட்டக் கூடாது என்றும், கம்மல், செயின், காப்பு போன்றவற்றை அணிய தடை விதித்துள்ளது. மேலும் பிறந்த நாட்களாக இருந்தாலும் சீருடையில் தான் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் பள்ளி மாணவர்களுக்கு கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment