ஹேமந்த் சோரன் நீதிமன்ற காவலுக்கு மாற்றம்..!

நில மோசடி வழக்கில் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டு அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்டார். ஹேமந்த் சோரனின் அமலாக்கத்துறை காவல் இன்று முடிவடைந்ததை அடுத்து முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தற்போது நீதிமன்ற காவலுக்கு  மாற்றப்பட்டார்.  இதனால், ஹேமந்த் சோரன் பிப்ரவரி 22-ம் தேதி வரை நீதிமன்றக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நில மோசடி வழக்கு தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி ஹேமந்த் சோரனிடம் சுமார் 5 மணி நேரதத்திற்கு மேலாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அவரை கைது செய்தனர். அமலாக்கத்துறை கைது செய்வதற்கு முன் தனது முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். பின்னர், ஜார்க்கண்ட் புதிய முதல்வராக சம்பாய் சோரன் பதவியேற்றார்.

ராணுவ ஆயுதத்தை பயன்படுத்தும் போலீசார் –  விவசாய சங்க தலைவர்..!

இந்த வழக்கில் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை முதல்முறையாக கடந்த பிப்ரவரி 2-ம் தேதி முதல் முறையாக  காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. அமலாக்கத்துறை பிப்ரவரி 2-ம் தேதி முதல் அவரை மூன்று முறை காவலில் எடுத்துள்ளது.

முதல் முறையும், இரண்டாவது முறையும் தலா ஐந்து நாட்களும், மூன்றாவது முறையாக மூன்று நாட்களும் அமலாக்கத்துறை காவலில் வைக்கப்பட்டார்.

author avatar
murugan

Leave a Comment