கடும் பனி: இனி காலை 10 மணிக்கு தான் பள்ளிகள் திறக்கும்.! மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு.!

பஞ்சாபில் ஜனவரி 21ஆம் தேதி வரை பள்ளிகள் காலை 10 மணிக்கு திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு.

அடர்ந்த பனிமூட்டம் காரணமாக பஞ்சாபில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள்ஜனவரி 21 வரை காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு, வழக்கமான நேரத்தில் மூடப்படும் என்று அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். இன்று மாநிலத்தின் பல பகுதிகளில் அடர்த்தியான மூடுபனியால் பார்வைத் திறன் பாதிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த சில நாட்களுக்கு குளிர்ச்சியான சூழல் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சமயத்தில் அனைத்து பள்ளிகளும் ஜனவரி 21 வரை காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு, வழக்கமான நேரத்தில் மூடப்படும் என அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment