தேனி மாவட்டங்களில் பலத்த மழை..!

கோவை, தேனி மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால் அணைகளின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் கனமழை காரணமாக சோலையார் அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 22 அடி உயர்ந்துள்ளது.  கூழாங்கல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தொடர்மழை காரணமாக மக்கள் வசிக்கும் பகுதகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் வால்பாறையில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 436 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2அடி உயர்ந்தது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை நீடிப்பதால் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் 3வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment