Northeast USA - Flights Cancelled

அமெரிக்காவில் புயலுடன் கூடிய கனமழை: 1500 விமானங்கள் ரத்து!

By

புயலுடன் கூடிய கனமழை வடகிழக்கு அமெரிக்காவை தாக்கியுள்ளது. இதனால், 1,500 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிகளில் புயலுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் நியூயார்க், நியூ ஜெர்சி, பென்சில்வேனியா, மேரிலேண்ட் ஆகிய மாகாணங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கடந்த சில நாட்களாகவே அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், புயல் காரணமாக நிலவிய மிக மோசமான வானிலையால் நியூயார்க், நியூ ஜெர்சி ஆகிய நகரங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் இருந்து சுமார் 1,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

அதன்படி, நியூ ஜெர்சியில் உள்ள நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை 362 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு 337 தாமதமாக தரையிறங்கியது.

மேலும், நியூயார்க்கில், ஜேஎஃப்கே சர்வதேச விமான நிலையத்தில் 318 ரத்து மற்றும் 426 விமானங்கள் தாமதமாக தரையிறங்கியது. நகரின் மற்றொரு விமான நிலையமான லாகார்டியா விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 270-ஐ எட்டியுள்ளது.