terrorists in Jammu and Kashmir

காஷ்மீரில் பதற்றம்: 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

By

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சிந்தாரா பகுதியில் 4 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சிந்தாரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நேற்றிரவு கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

உளவுத்துறை தகவலின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நேற்று இரவு 11:30 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

தற்போது, அவர்களின் உடலை அடையாளம் காணும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டனர். அப்போது, கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து 4 ஏகே 47 ரக துப்பாக்கிகள், இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் போர்க்கருவிகளை கைப்பற்றியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023