மும்பையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை! இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை முற்றிலும் முடங்கி போய் உள்ளது.

தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் 7ம் தேதி கேரளாவில் தொடங்கியது.  இந்த மழையால் இந்தியாவில் தென்மேற்கு பகுதியில் இருக்கும் மாநிலங்கள் அதிகம் பயனடையும் .  தற்போது பருவ மழையானது மும்பையில் தீவிரம் அடைந்துள்ளது.  கடந்த ஒரு வாரமாக இடை விடாது மழை பெய்து வருகிறது. நேற்று மட்டும் விடிய விடிய 19 செ.மீ  அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் நகரின் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாஸ்கர் மாவட்டத்தில் பல இடங்கள் நீரால் சூழப்பட்டுள்ளது.

இதனால், வாகன ஓட்டிகள் உட்பட பலர் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.