பலத்த சூறாவளி.. தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை மையம்

வங்கக்கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என வானிலை மையம் தகவல்.

மேலடுக்கு சுழற்சி காரணமாக ஏப்ரல் 7-ஆம் தேதி நாளை மறுநாள் தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தென் தமிழகம், டெல்டா பகுதிகளில் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

மேலும், ஏப்ரல் 7-ல் வங்கக்கடலில் தெற்கு, மத்திய பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுபோன்று ஏப்ரல் 8, 9 ஆகிய தேதிகளிலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் பலத்த சூறாவளி வீசக்கூடும் என்றும் இதனால் தென்கிழக்கு, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மணிக்கு 40 முதல் 55 கிமீ வேகத்தில் பலத்த சூராவளி காற்று வீச வாய்ப்பு இருப்பதால் 4 நாட்கள் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்