மது பாட்டில்களில் சுகாதார எச்சரிக்கை..மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்!

மது பாட்டில்களில் சுகாதார எச்சரிக்கை ஸ்டிக்கர்களை ஒட்டக் கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

சிகரெட் பாக்கெட்டுகளில் இருப்பது போன்று மது பாட்டில்களிலும், சுகாதார எச்சரிக்கை அடங்கிய ஸ்டிக்கர் ஓட்ட வேண்டும் என கோரி பொது நல மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சிகரெட்டை விட மதுபானம் 10 மடங்கு தீங்கு விளைவிக்கிறது. நீதிமன்ற உத்தரவுகளால், சிகரெட் பாக்கெட்டுகளில் சுகாதார எச்சரிக்கைகள்  கட்டாயமாக்கப்பட்டன.

அதே போல் மது பாட்டில்களிலும் இவ்வாறு எச்சரிக்கை ஸ்டிக்கர்களை கட்டாயமாக வேண்டும் என்று பொதுநல மனுதாரரும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாய் தனது மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித், நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் எஸ் ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுபோன்ற முடிவுகள் அரசாங்கத்தின் கொள்கை திட்டத்தின் கீழ் வரும் என்றும் கொள்கை விஷயங்களில் நீதி மன்றங்கள் தலையிட முடியாது எனவும் கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

author avatar
Muthu Kumar

Leave a Comment