ஆப்பிள் டீ குடித்தால் வயிற்றில் உள்ள கொலஸ்ட்ரால் உடனே குறையும்…தயாரிக்கும் முறை எப்படி..?

“தினமும் 1 ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடமே செல்ல வேண்டியதில்லை” இந்த வாசகத்தை பள்ளி பருவம் முதல் இன்று வரை நாம் கேட்டு வருகின்றோம். உண்மையில் இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபணம் ஆகியுள்ளது. தொடர்ந்து ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் பலவித மாற்றங்களை நம் உடலில் கொண்டு வர இயலும்.

உதாரணமாக தொப்பை முதல் எதிர்ப்பு சக்தி குறைபாடு வரை, ஆப்பிளை வைத்து தீர்வு காணலாம். வெறும் ஆப்பிளை சாப்பிடுவதை விட அதனை டீயாக தயாரித்து குடித்தால் நீண்ட நாட்களாக உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் அனைத்துமே முற்று பெற்று விடும். இனி ஆப்பிள் டீயின் நற்பயன்களை பற்றி அறியலாம்.

சர்க்கரை அளவு
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மிக எளிதில் குறைக்க ஆப்பிள் டீ உதவுகிறது. ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்துள்ளதால் உடலுக்கு பல்வேறு பலன்களை கொடுக்கும். இதற்கு காரணம் ஆப்பிளில் இருக்கின்ற இயற்கையான சர்க்கரை தான். இது சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது.

செரிமானம்
அஜீரண கோளாறு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வை தருகிறது ஆப்பிள் டீ. நார்சத்து அதிக அளவில் ஆப்பிள் டீயில் உள்ளதால் செரிமான மண்டலத்தை எந்தவித பாதிப்பும் இல்லாமல் வைத்து கொள்ளும். ஆப்பிள் டீ மிக விரைவிலே செரிமானத்தை ஏற்படுத்தும்.

கொலஸ்ட்ரால்
உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க ஆப்பிள் டீ பயன்படுகிறது. குறிப்பாக இது வயிற்று பகுதியில் உள்ள கொலஸ்ட்ராலை வெளியேற்ற உதவுகிறது. எனவே தொடர்ந்து ஆப்பிள் டீ குடித்து வந்தால் தொப்பை பறந்து போய் விடும்.

எதிர்ப்பு சக்தி
நோய்கள் நமது உடலை தாக்க வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை தான் காரணம். இவற்றின் அளவு குறைந்தால் நமக்கு பலவித ஆபத்துகள் உண்டாகும். ஆப்பிள் டீ குடித்தால் எதிர்ப்பு சக்தி உயரும். இதனால் பல்வேறு நோய்களின் பாதிப்பில் இருந்து உடலை பாதுகாத்து கொள்ளலாம்.

டீ தயாரிக்க தேவையானவை
ஆப்பிள் டீயை தயாரிக்க சில பொருட்களை தயாராக வைத்து கொள்ளுங்கள்.
1 ஆப்பிள்
3 கப் நீர்
2 ஸ்பூன் எலுமிச்சை சாறு
2 டீ பேக்ஸ்
அரை ஸ்பூன் இலவங்க பொடி

தயாரிக்கும் முறை
ஆப்பிள் டீயை தயாரிக்க முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்க விடவும். அடுத்து இதில் எலுமிச்சை சாறு, டீ பேக்ஸ் சேர்க்கவும். மிதமான சூட்டில் சில நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவும். பின் நறுக்கிய ஆப்பிளை அதில் சேர்க்கவும்.

5 நிமிடம் லேசான சூட்டில் கொதிக்க வைத்து எடுத்து கொள்ளவும். இறுதியாக இதில் இலவங்க பொடி சேர்த்து நன்கு கலக்கி குடித்து வரலாம். இவ்வாறு தினமும் 1 கப் ஆப்பிள் டீ குடித்து வந்தால் பலவித பயன்கள் கிடைக்கும்.

Leave a Comment