எழுத்தாளர் சுஜாதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

நாம செய்றது தப்புன்னே தெரியாத அளவுக்கு உங்களுக்கு தப்பு பழகிப்போச்சு – இந்தியன்

சின்ன சின்ன அலட்சியமெல்லாம் ஒண்ணா சேர்ந்து இப்போ பெரிய அலட்சியமா நம்ம தேசிய குணமாகிடிச்சி -அந்நியன்

தப்பு என்ன பனியன் சைசா மீடியம் லார்ஜுனு பாக்க, அதோட விளைவுகளை பாருங்கள் எல்லாமே எக்ஸ்ட்ரா லார்ஜ் தான் -அந்நியன்

நீங்க சட்டத்தை மீறலாம் நான் கையிலெடுத்த கூடாதா – அந்நியன்

இந்தியா ஏழை நாடு இல்லை : இங்க ஏழை இன்னும் ஏழை ஆகுறான் , பணக்காரன் இன்னும் பணக்காரணகுறான் – சிவாஜி

சுதந்திரம் வாண்டனத்திலிருந்து இந்த இடத்தை யாரும் சுத்தம் செய்ததாக தெரியல -இந்தியன்

இந்த வசனங்களும், படங்களும் படங்களும் உன்களை மெய் சிலிர்க்க வைத்தது என்றால் அந்த வசனங்களுக்கு சொந்தக்காரர் பெயர்தான் சுஜாதா. தனது எழுத்துக்களின் மூலம் கேட்பவர்களை வியப்படையும், சிந்திக்கவும் வைப்பவர் சுஜாதா. இவர் இப்போது உலகை விட்டு மறைந்தாலும், இவரது எழுத்துக்கள் இன்னும் பல வருடங்களுக்கு நம் நினைவில் இருக்கும்.

இவர் திரைத்துறையில்,எழுத்தாளராக விக்ரம், ரோஜா, கன்னத்தில் முத்தமிட்டாள், ஆயுத எழுத்து, உயிரே, இந்தியன், முதல்வன், சிவாஜி,  என பல வெற்றி படங்கள் என கூறுவதை விட தமிழ் சினிமாவின் அடையாளங்களாக மாறிய பல படங்களில் பணியாற்றியுள்ளார்.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment