நிவர் புயல் முழுமையாக கரையை கடந்து விட்டதா? புயலின் தற்போதைய நிலை என்ன?

தீவிர புயலாக வலுவிழந்த நிவர் புயல், புதுச்சேரியில் இருந்து வடமேற்கே சுமார் 50 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளதால், மணிக்கு 85-95 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்.

வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, அதி தீவிர புயலாக வலுப்பெற்று, நேற்று நள்ளிரவு 11:30 மணியளவில், புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அதன் பின் இந்த புயலானது, அதி தீவிர புயலில் இருந்து, தீவிர புயலாக வலுவிழந்து, புதுச்சேரி அருகே   முழுமையாக கரையை கடந்தது. இதனையடுத்து, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள், ரெட் அலார்ட்டில் இருந்து, ஆரஞ்சு அலார்ட்டாக மாறியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தீவிர புயலானது, அடுத்த 3 மணி நேரத்தில், புயலாக மாறும் என்றும், தற்போது இந்த புயல் புதுச்சேரியில் இருந்து வடமேற்கே சுமார் 50 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளதால், மணிக்கு 85-95 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்றும், இந்த காற்று நண்பகலில் 45 கி.மீ., ஆக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.