ஹரியானா மற்றும் மஹாராஷ்டிராவில் நடைபெற்ற பொதுத்தேர்தல் நிறைவு பெற்றது! 24ஆம் தேதி ரிசல்ட்!

ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் இன்று (அக்டோபர் 21-ஆம் தேதி) தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது.
மகாராஷ்டிராவில் 288 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. இங்கு பாஜக சிவசேனாவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. மேலும் ஹரியானாவில்  90 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. ஹரியானாவில் பாஜக-காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது.
இதற்காக  இந்த இரண்டு மாநிலங்களிலும்  காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தது.ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றது. இரண்டு மாநிலங்களிலும் இன்று (21-ஆம் தேதி) வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் வரும் 24-ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.