இப்போதும்..எப்போதும்..நீங்க மட்டும் தான்.! திருமணம் புகைப்படங்களை வெளியிட்ட ஹன்சிகா..

நடிகை ஹன்சிகா கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி தனது காதலரும், தொழிலதிபருமான சோஹேல் கதுரியாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் இருக்கும் பிரமாண்டமாக நடைபெற்றது. இவர்களது, திருமணத்திற்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர்.

HansikaMotwani Wedding
HansikaMotwani Wedding Image Source Twitter

ஒரு சில முக்கியமான பிரபலங்கள் மட்டுமே வருகை தந்தனர். திருமணத்தில் ஹன்சிகா விலை உயர்ந்த சிவப்பு கலர் லெஹங்காவும் உடம்பு முழுக்க தங்க நகைகள் அணிந்திருந்தார். திருமணத்திற்கான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.

HansikaMotwani Wedding
HansikaMotwani Wedding Image Source Twitter

இதனை தொடர்ந்து, தற்போது நடிகை ஹன்சிகா தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் முடிந்த புகைப்படங்களை வெளியீட்டு ” இப்பொழுதும் & எப்பொழுதும்” என எமோஷனைகளாக பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)

மேலும் திருமணத்தை தொடர்ந்தும் ஹன்சிகா படங்களில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.  அதன்படி இவர் தமிழில் 4 படங்களிலும், தெலுங்கில் 2 படங்களிலும் சில வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment