காஷ்மீரில் துணை கமிஷனர் அலுவலகத்திற்கு அருகே  கையெறி குண்டு வீச்சு !

காஷ்மீரில் துணை கமிஷனர் அலுவலகத்திற்கு அருகே  கையெறி குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.இதன் காரணமாக காஷ்மீரில் தற்போது வரை அசாதாரண சூழ்நிலை தான் உள்ளது.
இந்த நிலையில் இன்று  காஷ்மீரில் உள்ள மீரின் அனந்த்நாக் பகுதியில் உள்ள துணை கமிஷனர் அலுவலகத்திற்கு அருகே பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள் அவர்கள் தாங்கள் கொண்டுவந்த கையெறி குண்டுகளை துணை கமிஷனர் அலுவலகத்தை குறிவைத்து வீசினார்கள்.இந்த சம்பவத்தில் 5 பேர் காயம் அடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.