ஆளுநர் ஆரிப் முகமது கான் ஒரு சந்தர்ப்பவாதி – கேரளா முதல்வர்

கடந்த சில தினங்களுக்கு முன் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், புதுடெல்லி செல்வதற்காக திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது, இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ) சேர்ந்தவர்கள் சிலர், அவரது காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து ஆளுநர் அவர்கள், கேரளா முதல்வர் பினராயி விஜயன் மீது குற்றசாட்டுகளை  முன்வைத்திருந்தார். அவர் கூறுகையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தனக்கு உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறார். இந்த சம்பவம் தற்செயலான சம்பவம் அல்ல என்றும், மாறாக வேண்டுமென்றே தன்னை குறிவைத்து நடத்தப்பட்ட செயல் என்றும்  குற்றம்சாட்டியிருந்தார்.

மிக்ஜாம் புயல் பாதிப்பு.! 4 மாவட்ட மின் கட்டணம் எவ்வளவு.? வெளியான முக்கிய தகவல்…

ஆளுநரின் குற்றசாட்டையடுத்து கோட்டையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள், ஆளுநர் ஒரு சந்தர்ப்பவாதி. ஆளுநர் ஆளுநராக மட்டும் செயல்பட வேண்டும். எதை வேண்டுமானாலும் செய்யலாம், யாருக்கும் சவால் விடலாம் அல்லது தனது விருப்பப்படி செயல்படலாம் என ஆளுநர் நினைக்க கூடாது.

அரசியல் சட்டப்படி ஆளுநருக்கு என்ன வேலையோ அதை மட்டும் ஆளுநர் செய்ய வேண்டும். வகிக்கும் பதவி இழுக்கு ஏற்படுத்தும் விதம் நடந்து கொள்ள கூடாது. தனிப்பட்ட மனிதனாக தான் ஆளுநரை மதிப்பதாகவும், அதன் உணர்ந்து ஆளுநர் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.