U-19 கிரிக்கெட் அணியில் அரசுப்பள்ளி மாணவன் தேர்வு.!

  • தமிழகத்தில் 19 வயதிற்குட்ப்பட்டோருக்கான தமிழக கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்கு அரசுப்பள்ளி மாணவன் தேர்வாகியுள்ளார்.
  • ஜனவரி மாதம் ஹரியானாவில் மாநில அளவிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவன் ஒருவர் 19 வயதிற்குட்ப்பட்டோருக்கான தமிழக கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்கு தேர்வாகி உள்ளார். இவர் வெட்டுப்பட்டான்குட்டை பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி – பரிமளா தம்பதியின் மூத்த மகன் சஞ்சய் குமார்ஆவார். சஞ்சய் சிறுவயது முதலே கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்ட வந்ததால் தன்னார்வலர்களின் உதவியோடு தனியார் கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்து கிரிக்கெட் பயிற்சி பெற்று வந்தார். பின்னர் இவர் க்ளப் போட்டிகள், பள்ளி மாணவர்களுக்கு எதிரான போட்டிகள், மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார்.

இந்நிலையில், ஜனவரி மாதம் ஹரியானாவில் மாநில அளவிலான 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. அதனால் தமிழகத்திற்கான 16 பேர் கொண்ட அணியில் சஞ்சய் குமார் இடம் பெற்றுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்