“அரசுப் பணம் வீண்;மக்களுக்காக திட்டங்கள், திட்டங்களுக்காக மக்கள் அல்ல”- ஓபிஎஸ்..!

மக்களின் வரிப் பணம் வீணாகக்கூடிய நடைபாதை அமைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியது மாநில அரசின் கடமை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இதெல்லாம் மாநில அரசின் கடமை:

“சாலைகளின் இருமருங்கிலும் இடத்திற்கு தகுந்தாற்போல் பாதசாரிகளின் அளவிற்கு பொருத்தமான அகலம் கொண்ட நடைபாதைகள் அமைப்பதும், அந்த நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்படாமல் பார்த்துக் கொள்வதும், அவ்வாறு அமைக்கப்படும் நடைபாதைகள் பாதசாரிகள் நடப்பதற்கு ஏதுவாக இருக்கிறதா என்பதை கண்காணிப்பதும் மாநில அரசின் கடமை.

பாதசாரிகளுக்கு ஏற்படும் சிரமங்கள்:

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் விதமாகவும், பயண நேரம் மற்றும் வாகன இயக்கச் செலவினைக் குறைக்கும் வண்ணமும், புதிய பாலங்கள் அமைத்தல், வட்டச் சாலைகள் அமைத்தல், புறவழிச் சாலைகள் அமைத்தல் உட்பட பல்வேறு சாலைப் பணிகளைச் செய்யும் அரசு, நடைபாதை அமைக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது என்றாலும், அதில் பாதசாரிகளுக்கு சில சிரமங்கள் இருப்பதாகத் தெரிய வருகிறது.

ஏற்கனவே நல்ல நிலையில் உள்ள நடைபாதை;ஆனால்?:

சென்னையில், ஏற்கெனவே நல்ல நிலையில் உள்ள நடைபாதைகளில் இருந்த கருங்கற்கள், சிமெண்ட் கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு குப்பையில் வீசப்படுவதாகவும், அதற்குப் பதிலாக புதிதாக கிரானைட் கற்கள் பொருத்தப்படுவதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

ஆபத்து:

ஏற்கெனவே இருந்த கருங்கற்கள் மற்றும் சிமெண்ட் கற்களினால் ஆன நடைபாதைகள் சிறுவர்கள், மூத்தக் குடிமக்கள், கர்ப்பிணிப் பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் நடப்பதற்கு ஏதுவாக இருந்ததாகவும், இது போன்ற நடைபாதைகள் மழைக் காலங்களிலோ அல்லது அல்லது தண்ணீர் இருக்கும் இடங்களிலோ சறுக்காமல் பிடிமானத்துடன் இருந்ததாகவும், ஆனால், தற்போது பளபளப்பான கிரானைட் கற்களால் அமைக்கப்படும் நடைபாதைகள் சறுக்கும் தன்மை உடையதாக உள்ளதாகவும், இதன் காரணமாக மூத்தக் குடிமக்கள், சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர் நிலை தடுமாறும் சூழ்நிலை ஏற்படுவதாகவும், இதற்குப் பயந்து பெரும்பாலான பாதசாரிகள் நடைபாதைகளில் நடக்காமல் சாலையின் ஓரமாக நடப்பதாகவும், கிரானைட கற்கள் பதித்த நடைபாதை ஆபத்தானதாக உள்ளதாகவும் பாதசாரிகள் தெரிவிப்பதாக தகவல்கள் வருகின்றன.

அரசுப் பணம் வீண்:

மேலும், ஏற்கெனவே நல்ல நிலையில் இருந்த கருங்கற்கள் மற்றும் சிமெண்ட் கற்களினாலான நடைபாதைகள் பெயர்த்து எடுக்கப்பட்டு குப்பைத் தொட்டியில் வீசப்படுவதாகவும், இதன் காரணமாக மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மொத்தத்தில், இதுபோன்ற நடவடிக்கை, ‘அரசுப் பணம் வீண்’, ‘பொதுமக்களுக்கு அச்சம்’ என்ற இரட்டிப்பு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

‘மக்களுக்காக திட்டங்கள், திட்டங்களுக்காக மக்கள் அல்ல’ என்ற கோட்பாட்டிற்கேற்ப, மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய, மக்களின் வரிப் பணம் வீணாகக்கூடிய, விபத்துக்களையும், அதன்மூலம் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தக்கூடிய இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அரசின் கடமை என பொதுமக்கள் கருதுகிறார்கள்.

முதல்வர் இதை செய்ய வேண்டும்:

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இதில் உடனடியாக கவனம் செலுத்தி, இதன் உண்மை நிலையைக் கண்டறிந்து, பாதசாரிகளின் கருத்துக்களையும் கேட்டறிந்து, அரசுப் பணம் வீணடிக்கப்படுவதைத் தடுக்கவும், பாதசாரிகளின் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

ப்ளீஸ் பவுலர்களை யாராவது காப்பாற்றுங்க… ரவிச்சந்திரன் அஸ்வின் குமுறல்!

Ravichandran Ashwin: ஐபிஎல் தொடரில் விளையாடும் பந்துவீச்சாளர்களை யாரவது காப்பாற்றுங்க என்று ரவிச்சந்திரன் அஸ்வின் குமுறல். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், கொல்கத்தா அணியும்…

42 seconds ago

யுவராஜை கவுரவிக்கும் ஐசிசி ..! டி20 உலகக்கோப்பையில் புதிய ரோல் !!

Yuvaraj Singh : இந்த ஆண்டில் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டியில் யுவராஜ் சிங்கை தூதராக ஐசிசி அறிவித்துள்ளது. நடைபெற்ற கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு டி20…

21 mins ago

தேர்தல் நாளிலும் ஓயாத வன்முறை.! மணிப்பூரில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.!

Manipur : மணிப்பூர் மாநிலத்தில் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக…

27 mins ago

சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து…15 பேர் படுகாயம்.!

Bus Accident: ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளார். உளுந்தூர்பேட்டை அருகே சாலை தடுப்பில் மோதி, ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர்…

44 mins ago

காலி சொம்பு மட்டும் தான் மிச்சம்… பாஜகவை சொம்புடன் ஒப்பிட்டு விமர்சித்த ராகுல் காந்தி!

Rahul Gandhi: பாஜகவை 'பாரதிய சொம்பு கட்சி' என கர்நாடகாவில் நடைபெற்ற பிரச்சாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு…

56 mins ago

ஓரே கட்டமாக நடைபெற்ற கேரளாவில் 70.8% வாக்குப்பதிவு.!

Kerala Election 2024: கேரள மாநிலத்தில் 70.21% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட…

2 hours ago